الشعراء
Ash-Shu'araa
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
طسٓمٓ
Open ayah 26:1தா; ஸீம்; மீம்.
تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Open ayah 26:2(நபியே!) இது தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ
Open ayah 26:3(நபியே!) அவர்கள் (உங்களை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் போலும்!
إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ
Open ayah 26:4நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ
Open ayah 26:5ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதனை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 26:6(ஆகவே, இதனையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதனை(ப் பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ
Open ayah 26:7அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம்.
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:8நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:9(நபியே!) உங்களுடைய இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 26:10(நபியே!) உங்களுடைய இறைவன் மூஸாவை அழைத்து "நீங்கள் அநியாயக்கார (ஃபிர்அவ்னுடைய) மக்களிடம் செல்லுங்கள்" எனக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.
قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ
Open ayah 26:11"அந்த ஃபிர்அவ்னுடைய மக்கள் எனக்குப் பயப்பட மாட்டார்களா?" (என்று கேட்டான்.)
قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Open ayah 26:12அதற்கு அவர் "என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்" என்றார்.
وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ
Open ayah 26:13"(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கொன்னல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேச முடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!
وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ
Open ayah 26:14அன்றி, என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).
قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ
Open ayah 26:15அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அவ்வாறன்று (பயப்படாதீர்கள்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என்னுடைய அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:16ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று "நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனின் தூதர்களாவோம்" என்றும்,
أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:17"இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு என்றும் கூறுங்கள்!" (என்றும் கட்டளையிட்டான்.)
قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ
Open ayah 26:18(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) "நாங்கள் உங்களைக் குழந்தையாக எடுத்துக் கொண்டு வளர்க்கவில்லையா? நீங்கள் (உங்கள் வாலிபத்தை அடையும் வரையில்) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்கள்.
وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 26:19நீங்கள் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்கள்! (அதனை மன்னித்திருந்தும்) நீங்கள் நன்றி கெட்டவராகவே இருக்கின்றீர்கள்" என்றான்.
قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Open ayah 26:20அதற்கு மூஸா "நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதனை நான் செய்தேன்.
فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:21ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என்னுடைய இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன்னுடைய தூதராகவும் ஆக்கினான்.
وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:22ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?" என்று கூறினார்.
قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:23அதற்குப் ஃபிர்அவ்ன் "உலகத்தாரின் இறைவன் யார்?" என்று கேட்டான்.
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Open ayah 26:24அதற்கு (மூஸா) "வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன் தான் (உலகத்தாரை படைப்பவனும் வளர்ப்பவனும் ஆவான்). இவ்வுண்மையை நீங்கள் நம்புவீர்களா?" என்று கூறினார்.
قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ
Open ayah 26:25அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி "நீங்கள் இதனைச் செவியுறவில்லையா?" என்று கூறினான்.
قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:26அதற்கவர் "(அவன்) உங்கள் இறைவன் (மட்டும் அன்று; உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் (அவன்தான்)" என்று கூறினார்.
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ
Open ayah 26:27அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) "உங்களிடம் அனுப்பப்பட்ட (தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்" என்று சொன்னான்.
قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ
Open ayah 26:28அதற்கு (மூஸா) "கீழ் நாட்டையும் மேல் நாட்டையும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களையும் படைத்து காப்பவன் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)" என்று கூறினார்.
قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ
Open ayah 26:29அதற்கவன் "என்னைத் தவிர (மற்றெதனையும்) நீங்கள் இறைவனாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உங்களை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்" என்று கூறினான்.
قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ
Open ayah 26:30அதற்கவர் "தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்தபோதிலுமா?" என்று கேட்டார்.
قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 26:31அதற்கவன் "நீங்கள் சொல்வது உண்மையானால், அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான்.
فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ
Open ayah 26:32ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு பாம்பாகி விட்டது.
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ
Open ayah 26:33அன்றி, அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.
قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ
Open ayah 26:34(இதனைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி, "நிச்சயமாக இவர் மிகவும் நன்கு அறிந்த சூனியக்காரராக இருக்கிறார்.
يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ
Open ayah 26:35இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டான்.
قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Open ayah 26:36அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.
يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ
Open ayah 26:37அவர்கள் நன்கறிந்த சூனியக்காரர்கள் அனைவரையும் (தேடிப்பிடித்து) உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள்.
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 26:38(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ
Open ayah 26:39எல்லா மனிதர்களுக்கும் "(குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?" என்று பறை சாற்றப்பட்டது..
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 26:40(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாங்கள் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது).
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 26:41சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி "மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்கள்.
قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 26:42அதற்கவன் "ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம்முடைய சந்நிதியிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்" என்று கூறினான்.
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ
Open ayah 26:43அவர்களை நோக்கி மூஸா "நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்" எனக் கூறினார்.
فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 26:44ஆகவே, அவர்கள் தங்களுடைய தடிகளையும், கயிறுகளையும் எறிந்து "ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாய் நாங்களே வென்றுவிட்டோம்" என்று கூறினார்கள்.
فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ
Open ayah 26:45பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது.
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
Open ayah 26:46இதனைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து,
قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:47"உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 26:48அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்" என்று கூறினார்கள்.
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ
Open ayah 26:49அதற்கு (ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்களுடைய குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்" என்று கூறினான்.
قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Open ayah 26:50அதற்கவர்கள் "(அதனால் எங்களுக்கு) யாதொரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்" என்று கூறினார்கள்.
إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:51(அன்றி) "நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்து விடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்" (என்றும் கூறினார்கள்).
۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Open ayah 26:52பின்னர், மூஸாவுக்கு நாம் வஹீ அறிவித்ததாவது: "(இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்தே வருவார்கள்" (என்றோம்).
فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ
Open ayah 26:53(அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதனை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறை சாற்றுபவர்களை அனுப்பி வைத்து,
إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ
Open ayah 26:54"நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)
وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ
Open ayah 26:55நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ
Open ayah 26:56நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்" (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.)
فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 26:57(இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம்.
وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ
Open ayah 26:58(அன்றி, அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் அவர்களை வெளியேற்றினோம்.
كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:59இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவைகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கி விட்டோம்.
فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ
Open ayah 26:60சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ
Open ayah 26:61இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது "நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்" என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்.
قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ
Open ayah 26:62அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார்.
فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ
Open ayah 26:63ஆகவே, நாம் மூஸாவை நோக்கி "நீங்கள் உங்களுடைய தடியினால் இந்தக் கடலை அடியுங்கள்" என வஹீ அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப் போல் இருந்தது.
وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ
Open ayah 26:64(பின் சென்ற) மற்ற மக்களையும் அதனை நெருங்கச் செய்தோம்.
وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 26:65மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 26:66பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:67நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்பவில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:68(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ
Open ayah 26:69(நபியே!) அவர்களுக்கு இப்ராஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பியுங்கள்.
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ
Open ayah 26:70அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ
Open ayah 26:71அவர்கள் "நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்கள்.
قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ
Open ayah 26:72அதற்கு (இப்ராஹீம் அவர்களை நோக்கி) "அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?
أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ
Open ayah 26:73அல்லது (அவைகளை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?" என்று கேட்டார்.
قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ
Open ayah 26:74அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள்.
قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ
Open ayah 26:75நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என்று (இப்ராஹீம்) கேட்டார்.
أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ
Open ayah 26:76நீங்களும் உங்களுடைய முன்னோர்களான மூதாதையர் களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்.)
فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:77நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்.
ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ
Open ayah 26:78அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.
وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ
Open ayah 26:79அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.
وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ
Open ayah 26:80நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ
Open ayah 26:81அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.
وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 26:82கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.
رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ
Open ayah 26:83என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!
وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 26:84பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரையில் அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
Open ayah 26:85இன்ப சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக!
وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
Open ayah 26:86என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்.
وَلَا تُخۡزِنِي يَوۡمَ يُبۡعَثُونَ
Open ayah 26:87(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!
يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ
Open ayah 26:88அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது.
إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ
Open ayah 26:89ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ
Open ayah 26:90இறை அச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சுவனபதி கொண்டு வரப்படும்.
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِلۡغَاوِينَ
Open ayah 26:91வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் கொண்டு வந்து வைக்கப்படும்.
وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ
Open ayah 26:92அவர்களை நோக்கி "அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே?
مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ
Open ayah 26:93(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?" என்று கேட்கப்படும்.
فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ
Open ayah 26:94அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
وَجُنُودُ إِبۡلِيسَ أَجۡمَعُونَ
Open ayah 26:95(பின்னர்,) அவைகளும் (அவைகளை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
قَالُواْ وَهُمۡ فِيهَا يَخۡتَصِمُونَ
Open ayah 26:96அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 26:97"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,)
إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:98(தங்கள் தெய்வங்களை நோக்கி) "உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்!
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 26:99(இந்தக்) குற்றவாளிகளேயன்றி (எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.
فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
Open ayah 26:100எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
وَلَا صَدِيقٍ حَمِيمٖ
Open ayah 26:101(எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே!
فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:102நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக் கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்" என்று புலம்புவார்கள்.
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:103மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்புவதில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:104(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனுமாக இருக்கிறான்.
كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:105நூஹ்வுடைய மக்கள் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:106நூஹ் தன்னுடைய (இனச்) சகோதரர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:107மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:108ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:109(இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தாரைப் படைத்து காப்பாற்றி வளர்ப்பவனிடமே இருக்கின்றன.
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:110ஆதலால், நீங்கள் அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்" (என்று கூறினார்.)
۞قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ
Open ayah 26:111அதற்கவர்கள் "உங்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தாம் உங்களைப் பின்பற்றியிருக்கின்றனர்" என்று கூறினார்கள்.
قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 26:112அதற்கு அவர், "நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறிய மாட்டேன். (அதனை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்,
إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ
Open ayah 26:113(இவைகளைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட அறிந்துகொள்ள வேண்டாமா?
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:114நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.
إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 26:115பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி வேறில்லை" என்று கூறினார்.
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ
Open ayah 26:116அதற்கவர்கள் "நூஹே! நீங்கள் இதனை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் கல்லெறிந்து கொல்லப் படுவீர்கள்" என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ
Open ayah 26:117அதற்கவர், "என் இறைவனே! என்னுடைய (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்."
فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:118ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர் களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.
فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 26:119ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்.
ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ
Open ayah 26:120இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:121நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:122(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்.
كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:123"ஆது" உடைய மக்களும் நம்முடைய தூதரைப் பொய்யாக்கினார்கள்.
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:124அவர்களுடைய சகோதரர் "ஹூத்" அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:125நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்;
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:126ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடங்கள்.
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:127இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமே இருக்கிறது.
أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ
Open ayah 26:128நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகிறீர்களே!
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ
Open ayah 26:129நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கின்றீர்கள்.
وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ
Open ayah 26:130நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகின்றீர்கள்.
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:131அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ
Open ayah 26:132உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்.
أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ
Open ayah 26:133சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.
وَجَنَّٰتٖ وَعُيُونٍ
Open ayah 26:134தோட்டந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்)
إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 26:135(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார்.
قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ
Open ayah 26:136அதற்கவர்கள் "(ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே!
إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:137(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமேயன்றி வேறில்லை.
وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 26:138(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் யாதொரு வேதனைக்குள்ளாக மாட்டோம்" (என்று கூறினார்கள்)
فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:139மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:140(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:141"ஸமூது" மக்களும் அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதரைப் பொய்யாக்கினார்கள்.
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:142அவர்கள் சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (பாவத்தை விட்டு) விலகிக்கொள்ள வேண்டாமா?"
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:143நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்.
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:144ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்படுங்கள்.
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:145இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை."
أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ
Open ayah 26:146இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா?
فِي جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 26:147(இங்குள்ள) தோட்டந்துரவுகளிலும், நீர் ஊற்றுகளிலும்,
وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ
Open ayah 26:148குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந்தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும்,
وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ
Open ayah 26:149மலைகளைக் குடைந்து அமைக்கும் வீடுகளிலும், மிக்க ஆனந்தமாக என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு விடப்படுவீர்களா?
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:150ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 26:151வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.
ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ
Open ayah 26:152அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்களேயன்றி நன்மை செய்ய மாட்டார்கள்" என்று கூறினார்.
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ
Open ayah 26:153அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "உங்கள்மீது எவரோ சூனியம் செய்து விட்டார்கள். (ஆதலால், உங்களுடைய புத்தி தடுமாறிவிட்டது.)
مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 26:154நீங்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 26:155அதற்கவர் "(உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கின்றது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகின்றது.
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 26:156அன்றி, நீங்கள் அதற்கு யாதொரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் ஒரு நாளின் கடினமான வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார்.
فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ
Open ayah 26:157(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:158ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:159(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:160லூத்துடைய மக்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:161அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி "நீங்கள் (செய்யும் கொடிய பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா?
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:162நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்.
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:163(ஆகவே) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்படுங்கள்.
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:164இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அனைத்தும் உலகத்தாரின் இறைவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை.
أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:165(உங்களுக்குப் படைக்கப்பட்ட பெண்களை விட்டுவிட்டு) எல்லா படைப்புகளுக்குமே மாறாக நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக்கொள்ள) ஆண்களிடமே செல்கின்றீர்கள்.
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ
Open ayah 26:166உங்கள் இறைவன் உங்களுக்காக படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விட்டீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இந்த இயற்கை முறையை) மீறிய மக்கள்" என்று கூறினார்.
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ
Open ayah 26:167அதற்கவர்கள் "லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் (நம் ஊரைவிட்டுத்) துரத்தப்படுவீர்கள்" என்று கூறினார்கள்.
قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ
Open ayah 26:168அதற்கவர் "நிச்சயமாக நான் உங்களுடைய (இத்தீய) செயலை வெறுக்கின்றேன்" என்று கூறி,
رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ
Open ayah 26:169"என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக" என்று பிரார்த்தித்தார்.
فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 26:170ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Open ayah 26:171எனினும், அவருடைய ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 26:172பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்துவிட்டோம்.
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 26:173அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:174நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:175(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 26:176("மத்யன்" என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ
Open ayah 26:177ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக்கொள்ள வேண்டாமா?
إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 26:178நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்.
فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
Open ayah 26:179அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்படுங்கள்.
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:180இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ
Open ayah 26:181அளவை முழுமையாக அளங்கள். (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.
وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ
Open ayah 26:182சரியான தராசு கொண்டு நிறுங்கள்.
وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
Open ayah 26:183மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய பொருளை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்.
وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:184உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்" என்றும் கூறினார்.
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ
Open ayah 26:185அதற்கவர்கள் "நீங்கள் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்.
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ
Open ayah 26:186நீங்கள் நம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக நாம் உங்களைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கின்றோம்.
فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 26:187நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து ஒரு சில துண்டுகளை நம்மீது எறியுங்கள்" என்று கூறினார்கள்.
قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 26:188அதற்கவர் "நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோச) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)" என்று கூறினார்.
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ
Open ayah 26:189(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது வேதனையுடைய மகத்தான நாளாகவே இருந்தது.
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
Open ayah 26:190நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 26:191(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 26:192(நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது.
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ
Open ayah 26:193(இறைவனின் கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (என்னும் ஜிப்ரீல்) இதனை உங்களது உள்ளத்தில் இறக்கி வைத்தார்.
عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ
Open ayah 26:194(மனிதர்களுக்கு) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,
بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ
Open ayah 26:195தெளிவான அரபி மொழியில் (இதனை இறக்கி வைத்தான்).
وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 26:196இதைப் பற்றிய முன்னறிக்கை) நிச்சயமாக முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது.
أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ
Open ayah 26:197இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதனை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா?
وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ
Open ayah 26:198(இவர்கள் விரும்புவதைப் போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதனை இறக்கி வைத்து,
فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ
Open ayah 26:199அவர் இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 26:200அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம்.
لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ
Open ayah 26:201ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரையில் இதனை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ
Open ayah 26:202அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.
فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ
Open ayah 26:203அச்சமயம் அவர்கள் "எங்களுக்கு (ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?
أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
Open ayah 26:204"எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப் படுகின்றனர்?" என்று கூறுவார்கள்.
أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ
Open ayah 26:205(நபியே!) நீங்கள் கவனித்தீர்களா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்கவிட்டு வைத்திருந்தபோதிலும்,
ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ
Open ayah 26:206பின்னர், அவர்களைப் பயமுறுத்தும் வேதனை வந்தடையுமானால்
مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ
Open ayah 26:207அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காதே!
وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Open ayah 26:208(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரையில் எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 26:209(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்தவனாக இருக்கவில்லை.
وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ
Open ayah 26:210(இவர்கள் கூறுகின்றவாறு) இவ்வேதத்தை ஷைத்தான் இறக்கவுமில்லை.
وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ
Open ayah 26:211அது அவர்களுக்குத் தகுதியுமன்று; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.
إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ
Open ayah 26:212நிச்சயமாக அவர்கள் (இதனை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.
فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ
Open ayah 26:213ஆதலால், (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவனை அழைக்காதீர்கள். (அழைத்தால்) அதனால் நீங்கள் வேதனைக்குள்ளாவீர்கள்.
وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ
Open ayah 26:214நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.
وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 26:215உங்களைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக) நடந்து கொள்ளுங்கள்.
فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ
Open ayah 26:216ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் "நிச்சயமாக நான் உங்கள் செயலிலிருந்து விலகிவிட்டேன்" என்று கூறி,
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ
Open ayah 26:217நிகரற்ற அன்புடையவனான, அனைவரையும் மிகைத்தவன் மீது (உங்களுடைய காரியங்களை) பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள்.
ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ
Open ayah 26:218நீங்கள் நின்று வணங்கும்போதும் அவன் உங்களை பார்க்கின்றான்.
وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ
Open ayah 26:219சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் அசைவதையும் அவன் பார்க்கின்றான்.
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 26:220நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறான்.
هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ
Open ayah 26:221(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ
Open ayah 26:222பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ
Open ayah 26:223தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே!
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ
Open ayah 26:224கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர்.
أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ
Open ayah 26:225நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?
وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ
Open ayah 26:226நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ
Open ayah 26:227(ஆயினும்,) அவர்களில் எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினாரோ அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம். பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய இந்த) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வார்கள்.