الصافات
As-Saaffaat
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا
Open ayah 37:1அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!
فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا
Open ayah 37:2(தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!
فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا
Open ayah 37:3(இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ
Open ayah 37:4நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ
Open ayah 37:5அவனே வானங்களையும், பூமியையும், அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன். கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ
Open ayah 37:6நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்.
وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ
Open ayah 37:7மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்).
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ
Open ayah 37:8மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதனை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளி களால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.
دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ
Open ayah 37:9அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ
Open ayah 37:10(தப்பித் தவறி யாதொரு வார்த்தையை) இறாய்ஞ்சிச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்துவிட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது.
فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ
Open ayah 37:11(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீங்கள் கேளுங்கள்: (இறந்த பின்) உங்களைப் படைப்பது கஷ்டமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவைகளைப் படைப்பது கஷ்டமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசு பிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ
Open ayah 37:12(நபியே!) நீங்கள் (அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) ஆச்சரியப்படுகின்றீர்கள்; அவர்களோ (அதனைப்) பரிகசிக் கின்றனர்.
وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ
Open ayah 37:13அன்றி, அவர்களுக்கு நல்லுபதேசம் கூறியபோதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.
وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ
Open ayah 37:14எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ
Open ayah 37:15அன்றி "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர்.
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 37:16"நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்)
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 37:17(அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப் படுவார்கள்" என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)
قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ
Open ayah 37:18அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்தான். (எழுப்பப்படுவீர்கள்.) அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ
Open ayah 37:19அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்.
وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 37:20நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 37:21(அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்" (என்றும் கூறப்படும்).
۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ
Open ayah 37:22அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று சேர்த்து,
مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:23"அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" (என்றும்),
وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ
Open ayah 37:24"அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கின்றது" (என்றும் கூறப்படும்).
مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ
Open ayah 37:25"உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை" (என்றும் கேட்கப்படும்).
بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ
Open ayah 37:26எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்த வர்களாக இருப்பார்கள்.
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:27அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு,
قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ
Open ayah 37:28(சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு வழிப்படும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்" என்று கூறுவார்கள்.
قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ
Open ayah 37:29அதற்கு அ(த்தலை)வர்கள் "அவ்வாறன்று. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தாம் நம்பிக்கை கொள்ளவில்லை."
وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ
Open ayah 37:30"எங்களுக்கு உங்கள் மீது யாதொரு அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள்தாம் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்.
فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ
Open ayah 37:31ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே.
فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ
Open ayah 37:32நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்.
فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ
Open ayah 37:33முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளியாக இருப்பார்கள்.
إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 37:34நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.
إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ
Open ayah 37:35"அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டு,
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ
Open ayah 37:36"என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டு விடுவோமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:37"(அவர் பைத்தியக்காரர்) அன்று. அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ
Open ayah 37:38ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 37:39நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கன்றி உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை" (என்றும் கூறப்படும்).
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:40கலப்பற்ற மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ
Open ayah 37:41இத்தகையவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேலான) உணவு தயார் செய்யப்படுத்தப்பட்டிருக்கும்.
فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ
Open ayah 37:42(இன்பமான) கனிவர்க்கங்கள் கொடுத்துக் கண்ணியப் படுத்தவும் படுவார்கள்.
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 37:43இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள்.
عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 37:44கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்.
يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ
Open ayah 37:45மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.
بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ
Open ayah 37:46(அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்.
لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ
Open ayah 37:47அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது.
وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ
Open ayah 37:48அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.
كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ
Open ayah 37:49அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும்.
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:50அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவைகளைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்.
قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ
Open ayah 37:51அவர்களில் ஒருவர் கூறுவார்: "(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ
Open ayah 37:52அவன் என்னை நோக்கி "நிச்சயமாக நீ இதனை நம்புகிறாயா?" என்று கேட்டான்.
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
Open ayah 37:53என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக (நம்முடைய செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?" என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தான்.
قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ
Open ayah 37:54"(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகின்றீர்களா? என்று கூறி,
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:55அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ
Open ayah 37:56(அவனை நோக்கி) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்."
وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ
Open ayah 37:57"என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.
أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ
Open ayah 37:58(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?
إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 37:59(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்).
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 37:60நிச்சயமாக இது மகத்தானதொரு பாக்கியமாகும்.
لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ
Open ayah 37:61ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப்போன்ற (நற்பேறுகளை பெறுவதற்காக) பாடுபடவும்.
أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ
Open ayah 37:62(அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா?
إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ
Open ayah 37:63(மனிதர்களே!) நிச்சயமாக நாம் அதனை இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே உண்டுபண்ணி இருக்கிறோம்.
إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:64மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும்.
طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ
Open ayah 37:65அதன் கிளைகள் ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும்.
فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 37:66நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக்கொடுமையினால்) அதனை புசிப்பார்கள்! இன்னும் அதிலிருந்தே (தங்கள்) வயிற்றை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ
Open ayah 37:67பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்துக் காய்ந்திருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே அவர்களுக்கு குடிப்பாகக் கொடுக்கப்படும்.
ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ
Open ayah 37:68(இவைகளைப் புசித்துக் குடித்த பின்னர்,) நிச்சயமாக "ஜஹீம்" என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள்.
إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ
Open ayah 37:69இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள்.
فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ
Open ayah 37:70அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள்.
وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:71இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர்.
وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ
Open ayah 37:72நிச்சயமாக நாம் அவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்முடைய) தூதர்களை அனுப்பியே வைத்தோம்.
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:73ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் பாருங்கள்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:74அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம்முடைய வேதனைக்கு உள்ளாவார்கள்.
وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ
Open ayah 37:75நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க நல்லவர்.
وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:76ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான கஷ்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ
Open ayah 37:77அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:78அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:79"ஸலாம்" ஈடேற்றம் நூஹ்வுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது.
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:80இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:81(நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நமது அடியார்களில் ஒருவராகவே இருந்தார்.
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:82(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்.
۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ
Open ayah 37:83இப்ராஹீம் நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர் தான்.
إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ
Open ayah 37:84அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்,
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ
Open ayah 37:85அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டு,
أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
Open ayah 37:86"நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா?
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:87அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து வளர்த்து வரும் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?" என்று கேட்டார்.
فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ
Open ayah 37:88"பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்து,
فَقَالَ إِنِّي سَقِيمٞ
Open ayah 37:89நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் போல் இருக்கின்றது" என்று கூறவே,
فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ
Open ayah 37:90அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்றுவிட்டனர்.
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ
Open ayah 37:91(பின்னர்) அவர், அவர்களுடைய கோயிலுக்குள் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) "நீங்கள் இவைகளை ஏன் புசிப்பதில்லை?
مَا لَكُمۡ لَا تَنطِقُونَ
Open ayah 37:92உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டு(ப் பதில் கிடைக்காததனால்,)
فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ
Open ayah 37:93அவைகளைப் பலமாக அடித்துத் தாக்கி (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.
فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ
Open ayah 37:94(திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதனைக் கண்டதும்) இப்ராஹீமிடம் ஓடி வந்து (அதைப் பற்றிக் கேட்கவே)
قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ
Open ayah 37:95அவர், (அவர்களை நோக்கி) "உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?
وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ
Open ayah 37:96உங்களையும், நீங்கள் சித்தரித்த அவைகளையும் அல்லாஹ்வே படைத்தான்" என்றார்.
قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ
Open ayah 37:97(அதற்கு அவர்கள் பதில் கூற வகையறியாது கோபம் கொண்டு,) "இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் .அவரை எறிந்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ
Open ayah 37:98இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ
Open ayah 37:99பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) "நான் என் இறைவனிடமே செல்கின்றேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்" (என்று கூறி,)
رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:100"என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!" என்றார்.
فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ
Open ayah 37:101ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 37:102(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்த பொழுது, அவர் (தன் மகனை நோக்கி) "என் அருமை மைந்தனே! நான் உன்னை (என்னுடைய கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என்னுடைய கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?" என்று கேட்டார். அதற்கவர், "என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதனைச் சகித்துக்கொண்டு) உறுதியாயிருப் வனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.
فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ
Open ayah 37:103ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்.
وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ
Open ayah 37:104அச்சமயம் நாம் "இப்ராஹீமே!" என அழைத்து,
قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:105உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்" என்றும் கூறி,
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ
Open ayah 37:106"நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்" (என்றும் கூறினோம்).
وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ
Open ayah 37:107ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:108அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.
سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
Open ayah 37:109(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) "இப்ராஹீமுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக" (என்றும் கூறுகின்றனர்.)
كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:110இவ்வாறே, நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:111நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நமது அடியாராகவே இருந்தார்.
وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:112இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்.
وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ
Open ayah 37:113அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:114நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூனின் மீதும் அருள் புரிந்தோம்.
وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:115அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையானதொரு துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 37:116அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்.
وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ
Open ayah 37:117அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
Open ayah 37:118அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.
وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:119பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:120(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:121நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்தவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம்.
إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:122நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நமது அடியார்களாகவே இருந்தனர்.
وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:123நிச்சயமாக இல்யாஸும் நமது தூதர்களில் ஒருவர்தான்.
إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
Open ayah 37:124அவர் தன் மக்களை நோக்கி, "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?" என்று கூறிய சமயத்தில்,
أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ
Open ayah 37:125"படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, "பஅலு" என்னும் சிலையை வணங்கு கின்றீர்களா?
ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:126அல்லாஹ்தான் உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமாவான்" (என்று கூறினார்).
فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:127ஆயினும், அவர்கள் (அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:128கலப்பற்ற அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:129பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ
Open ayah 37:130(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) "இல்யாஸுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறுகின்றனர்).
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:131நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:132நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார்.
وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:133நிச்சயமாக லூத்தும் நமது தூதர்களில் ஒருவர்தான்.
إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 37:134அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்.
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Open ayah 37:135ஆயினும், அவருடைய கிழ மனைவியைத் தவிர; அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:136(அவளுடன் பாவம் செய்த) மற்றவர்களை நாம் அழித்து விட்டோம்.
وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ
Open ayah 37:137ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் ஷாம் தேசத்திற்கு வர்த்தகத்திற்குப் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.
وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 37:138(இதனைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெற வேண்டாமா?
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:139நிச்சயமாக யூனுஸும் நம்முடைய தூதர்களில் ஒருவர்தான்.
إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 37:140(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ
Open ayah 37:141அ(க் கப்பலிலுள்ள)வர்கள் (திருவுளச்) சீட்டுப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.
فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ
Open ayah 37:142(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.
فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ
Open ayah 37:143நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,
لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 37:144(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ
Open ayah 37:145(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ
Open ayah 37:146ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச் செடியை முளைப்பித்தோம்.
وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ
Open ayah 37:147பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.
فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ
Open ayah 37:148அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம்.
فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ
Open ayah 37:149(நபியே!) அவர்களை நீங்கள் கேளுங்கள்: "(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகின்றீர்கள்.)
أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ
Open ayah 37:150அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ
Open ayah 37:151இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 37:152அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று கூறும் இவர்கள் நிச்சயமாகப் பொய்யர்களே!
أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ
Open ayah 37:153(அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
Open ayah 37:154(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கின்றீர்கள்?
أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 37:155நீங்கள் இதனை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா?
أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ
Open ayah 37:156அல்லது உங்களுக்கு (இதற்காக யாதொரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 37:157(கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள்.
وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:158(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.
سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:159அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:160கலப்பற்ற நம்பிக்கையுள்ள அல்லாஹ்வின் அடியார்களோ, (தப்பாண எண்ணம் கொள்ளாததனால்) தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.
فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ
Open ayah 37:161(நபியே! நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவைகளும் ஒன்று சேர்ந்தபோதிலும்,
مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ
Open ayah 37:162(எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிடமுடியாது.
إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:163நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ
Open ayah 37:164(மலக்குகள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;
وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ
Open ayah 37:165நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கின்றோம்.
وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ
Open ayah 37:166நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கின்றோம்.
وَإِن كَانُواْ لَيَقُولُونَ
Open ayah 37:167(நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக்கொண்டிருந்ததாவது:
لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:168"முன்னுள்ளோர்களின் யாதொரு வேதத்தைப் போன்ற ஏதும் எங்களிடம் இருக்கும் சமயத்தில்,
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:169நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்" என்றார்கள்.
فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 37:170எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதனை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் பயனை) இவர்கள் அறிந்துகொள்வார்கள்.
وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:171நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது.
إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ
Open ayah 37:172ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 37:173நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்) தாம் வெற்றி பெறுவார்கள்.
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:174ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீங்கள் விலகியிருங்கள்.
وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:175(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள்.
أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
Open ayah 37:176(என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:177(நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் பட்சத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.
وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:178(நபியே!) அவர்களை நீங்கள் சிறிது காலம் புறக்கணித்து விடுங்கள்.
وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:179(அவர்களுக்கு வேதனை வருவதை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அவர்களும் (அதனை) நிச்சயமாகக் காண்பார்கள்.
سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:180அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் கண்ணியமிக்க உங்களது இறைவன் மிகப் பரிசுத்தமானவன்.
وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:181(அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் உங்கள் (அனைவர்) மீதும் அவனுடைய ஈடேற்றம் உண்டாவதாக!
وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:182புகழ் அனைத்தும் உலகத்தாரைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கு உரித்தானது.