الدخان
Ad-Dukhaan
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 44:1ஹாமீம்.
وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ
Open ayah 44:2தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
Open ayah 44:3நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம்.
فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ
Open ayah 44:4உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.
أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ
Open ayah 44:5(நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம்முடைய தூதராக) அனுப்புகின்றோம்.
رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
Open ayah 44:6(அது) உங்களது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Open ayah 44:7நீங்கள் மெய்யாகவே (உண்மையை) நம்புபவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).
لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 44:8அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயனில்லை. அவனே உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கவும் செய்கின்றான். அவனே உங்களின் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.
بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ
Open ayah 44:9எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!
فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ
Open ayah 44:10(நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்.
يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 44:11மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும்.
رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ
Open ayah 44:12(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கின்றோம்" (என்று கூறுவார்கள்).
أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ
Open ayah 44:13(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.
ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ
Open ayah 44:14எனினும், அவர்கள் அவரை புறக்கணித்து, (அவரைப்பற்றி "இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரன்தான்" என்று கூறினர்.
إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ
Open ayah 44:15(மெய்யாகவே நீங்கள் உணர்ச்சி பெறக்கூடுமென்று) அவ்வேதனையைப் பின்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகின்றீர்கள்.
يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ
Open ayah 44:16மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.
۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ
Open ayah 44:17இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) ஒரு தூதர் வந்தார்.
أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ
Open ayah 44:18(வந்த அவர்) "அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான ஒரு தூதர்.
وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Open ayah 44:19அல்லாஹ்வுக்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன்" என்று கூறினார். (அதற்கவர்கள் "நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு மூஸா)
وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ
Open ayah 44:20"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும்படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பைத் தேடுகிறேன்" என்றார்.
وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ
Open ayah 44:21"நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்" (என்றும் கூறி)
فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ
Open ayah 44:22தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கின்றார்கள்" என்றும் கூறினார்.
فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
Open ayah 44:23(அதற்கு இறைவன்) "நீங்கள் (இஸ்ரவேலர்களாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ
Open ayah 44:24(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப் பட்டுவிடும்" (என்று கூறி மூழ்கடித்தான்.)
كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 44:25(அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும்,
وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ
Open ayah 44:26எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் விட்டுச் சென்றனர்.
وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ
Open ayah 44:27அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்.)
كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ
Open ayah 44:28இவ்வாறே (நடைபெற்றது. அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத) வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.
فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ
Open ayah 44:29(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.
وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ
Open ayah 44:30(இவ்வாறு) இஸ்ராயீலின் சந்ததிகளை ஃபிர்அவ்ன் இழிவுபடுத்தி, (அவர்களை அவன்) செய்து கொண்டிருந்த வேதனையில் இருந்தும் மெய்யாக நாமே பாதுகாத்துக் கொண்டோம்.
مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ
Open ayah 44:31ஃபிர்அவ்னோ வரம்பு மீ(றித் துன்பு)று(த்து)பவனாகவும், மாறு செய்பவனாகவுமே இருந்தான்.
وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 44:32(இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ
Open ayah 44:33இன்னும், அவர்களுக்கு (மன்னுஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவைகளில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.
إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ
Open ayah 44:34(எனினும்,) நிச்சயமாக (மக்கத்துக் காஃபிர்களாகிய) இவர்கள் கூறுவதாவது:
إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ
Open ayah 44:35"இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) உயிர் கொடுத்து எழுப்பப்படமாட்டோம்" (என்று கூறுவதுடன்,)
فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 44:36(நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்" (என்றனர்).
أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ
Open ayah 44:37(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது இவர்களுக்கு முன்னிருந்த "துப்பஉ" என்னும் மக்கள் மேலானவர்களா? அவர்களையும் கூட நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ
Open ayah 44:38வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 44:39நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே அன்றி, இவைகளை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிந்துகொள்வதில்லை.
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 44:40நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 44:41அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ
Open ayah 44:42ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.) நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
Open ayah 44:43நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம்தான்
طَعَامُ ٱلۡأَثِيمِ
Open ayah 44:44பாவிகளின் உணவு.
كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ
Open ayah 44:45(அது) உருகிய செம்பைப் போல் அவர்களுடைய வயிற்றில் கொதிக்கும்.
كَغَلۡيِ ٱلۡحَمِيمِ
Open ayah 44:46சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).
خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ
Open ayah 44:47"அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்.
ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ
Open ayah 44:48அவர்களுடைய தலைக்கு மேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்" (என்று கூறப் படுவதுடன், அவர்களை நோக்கி ஏளனமாக,)
ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ
Open ayah 44:49"நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவர்கள். ஆதலால், நீங்கள் (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பாருங்கள்" (என்றும்,)
إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ
Open ayah 44:50"நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தது" (என்றும் கூறப்படும்).
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ
Open ayah 44:51இறை அச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,
فِي جَنَّٰتٖ وَعُيُونٖ
Open ayah 44:52அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக,
يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 44:53மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ
Open ayah 44:54இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.
يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ
Open ayah 44:55அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.
لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ
Open ayah 44:56முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 44:57(நபியே! இது) உங்களது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.
فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
Open ayah 44:58(நபியே!) அவர்கள் அறிந்து நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உங்களுடைய மொழியில் எளிதாக்கி வைத்தோம்.
فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ
Open ayah 44:59(இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.