الواقعة
Al-Waaqia
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 56:1(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
Open ayah 56:2அதனை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.
خَافِضَةٞ رَّافِعَةٌ
Open ayah 56:3அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்.
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
Open ayah 56:4(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு,
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
Open ayah 56:5மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்துவிடும்.
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
Open ayah 56:6அவைகள் (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்.
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
Open ayah 56:7(அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 56:8(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.)
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 56:9(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத் திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.)
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Open ayah 56:10(மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள்.
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 56:11இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்.
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 56:12இவர்கள் இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள்.
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:13(இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:14பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்.
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ
Open ayah 56:15பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது,
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ
Open ayah 56:16ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ
Open ayah 56:17என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்;
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ
Open ayah 56:18இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.)
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ
Open ayah 56:19(அப்பானங்களால்) இவர்களுக்குத் தலை நோயும் ஏற்படாது; இவர்கள் புத்தியும் மாறாது.
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ
Open ayah 56:20இவர்கள் பிரியப்பட்ட கனி வர்க்கங்களையும்,
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ
Open ayah 56:21விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்).
وَحُورٌ عِينٞ
Open ayah 56:22(அங்கு இவர்களுக்கு) "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகி களான மனைவி)களும் இருப்பார்கள்.
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
Open ayah 56:23அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 56:24இவைகள் அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும்.
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا
Open ayah 56:25அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள்.
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا
Open ayah 56:26ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்.
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ
Open ayah 56:27வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்,
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ
Open ayah 56:28முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்,
وَطَلۡحٖ مَّنضُودٖ
Open ayah 56:29(நுனி முதல்) அடி வரையில் குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்,
وَظِلّٖ مَّمۡدُودٖ
Open ayah 56:30அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள்.
وَمَآءٖ مَّسۡكُوبٖ
Open ayah 56:31அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்,
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ
Open ayah 56:32ஏராளமான கனி வர்க்கங்களும் உண்டு.
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ
Open ayah 56:33அதன் கனிகள் (புசிக்க) தடுக்கவும் படாது. (பறிப்பதால்) குறைவுமுறாது. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.)
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ
Open ayah 56:34உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்).
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ
Open ayah 56:35(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக் கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا
Open ayah 56:36கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கின்றோம்.
عُرُبًا أَتۡرَابٗا
Open ayah 56:37அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:38(முன்னர் வர்ணிக்கப்பட்ட) இவைகள் வலது பக்கத்திலுள்ள வர்களுக்குக் கிடைக்கும்.
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:39(இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு கூட்டத்தினரும்,
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:40பின்னுள்ளோரில் ஒரு கூட்டத்தினரும் இருப்பார்கள்.
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ
Open ayah 56:41இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம் தான் என்னே!
فِي سَمُومٖ وَحَمِيمٖ
Open ayah 56:42(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்,
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ
Open ayah 56:43அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ
Open ayah 56:44(அங்குக்) குளிர்ச்சியான பானமும் இருக்காது; சங்கையான எதுவும் இருக்காது.
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ
Open ayah 56:45இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்.
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ
Open ayah 56:46எனினும், பெரும் பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்.
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 56:47அன்றி, என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 56:48(அவ்வாறே) முன் சென்றுபோன நம்முடைய மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தனர்.
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ
Open ayah 56:49(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி;
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 56:50நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
Open ayah 56:51அதற்குப் பின்னர், (இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ
Open ayah 56:52கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்.
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 56:53அதைக்கொண்டே உங்களுடைய வயிற்றை நிரப்புவீர்கள்.
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ
Open ayah 56:54அதற்குப் பின்னர் மிக அதிகமாகக் கொதிக்கும் சுடுநீரைக் குடிப்பீர்கள்.
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ
Open ayah 56:55(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப் போல் நீங்கள் குடிப்பீர்கள்.
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 56:56கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்.
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
Open ayah 56:57(வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கின்றோம். (ஆகவே, மறுமுறை உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ
Open ayah 56:58நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ
Open ayah 56:59அதனை (சிசுவாக) நீங்கள் படைக்கின்றீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா?
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 56:60நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 56:61நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
Open ayah 56:62முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ
Open ayah 56:63(நீங்கள் பூமியில்) பயிரிடுபவைகளைக் கவனித்தீர்களா?
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ
Open ayah 56:64அதனை, நீங்கள் (முளைப்பித்துப்) பயிராக்குகின்றீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா?
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
Open ayah 56:65நாம் விரும்பினால், அதனை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டு,
إِنَّا لَمُغۡرَمُونَ
Open ayah 56:66"நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்,
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
Open ayah 56:67அன்றி, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ
Open ayah 56:68நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா?
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
Open ayah 56:69மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா?
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ
Open ayah 56:70நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ
Open ayah 56:71நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா?
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
Open ayah 56:72அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா?
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ
Open ayah 56:73(நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப் போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதனை நாம்தாம் படைத்திருக்கின்றோம்.
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:74ஆகவே, (நபியே!) மகத்தான உங்களது இறைவனின் பெயரைக் கொண்டு நீங்கள் (அவனை) புகழ்வீர்களாக!
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Open ayah 56:75நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம்.
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ
Open ayah 56:76(உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ
Open ayah 56:77நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ
Open ayah 56:78(இது "லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
Open ayah 56:79பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 56:80உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது அருளப்பட்டது.
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ
Open ayah 56:81ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகின்றீர்களா?
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
Open ayah 56:82அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கின்றீர்களா?
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
Open ayah 56:83(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்,
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ
Open ayah 56:84அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கின்றீர்கள்.
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ
Open ayah 56:85ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை.
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ
Open ayah 56:86நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்து,
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 56:87மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர் களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீள வைப்பதுதானே!
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 56:88(இறந்தவன் இறை அச்சமுடையவனாக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவனாக இருந்தால்,
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ
Open ayah 56:89அவனுக்குச் சுகமும் மகிழ்ச்சியும் உண்டு; இன்பமளிக்கும் சுவனபதியுமுண்டு.
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:90(அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ,
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:91அவரை நோக்கி "வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உங்களுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்.
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Open ayah 56:92அன்றி, அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்,
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ
Open ayah 56:93முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாவதுடன்,
وَتَصۡلِيَةُ جَحِيمٍ
Open ayah 56:94நரகத்திலும் தள்ளப்படுவான்.
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 56:95நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்.
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:96ஆகவே (நபியே!) நீங்கள் மகத்தான உங்களது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக!