المرسلات
Al-Mursalaat
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீதும்,
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2அதிவேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகளின் மீதும்,
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்களின் மீதும் சத்தியமாக!
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப் பவை(களாகிய வேதங்)களின் மீதும்,
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9வானம் திறக்கப்பட்டுவிடும்.
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10மலைகள் (தூசிகளைப் போல்) தவிடுபொடியாக்கப்படும்.
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12(இவைகள் எல்லாம்) எதுவரையில் பிற்படுத்தப் பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீங்கள் அறிவீர்களா)?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13தீர்ப்பு கூறப்படும் நாள் வரையில்தான்!
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீங்கள் அறிவீர்களா?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15(நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16(அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்த வர்களையும் நாம் அழித்துவிட வில்லையா?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்துபோன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளி களையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19ஆகவே, (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கு பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களை படைக்க வில்லையா?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21அதனை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரையில் தங்கும்படி நாம் செய்தோம்,
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22அதனை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரையில் தங்கும்படி நாம் செய்தோம்,
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23பின்னர் நாமே அதனை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24ஆகவே, (இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28(நம்முடைய இந்நன்றிகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29(மறுமையில் இவர்களை நோக்கி,) "எ(ந்நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன்பாலே நீங்கள் செல்லுங்கள்.
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்" (என்றும் கூறப்படும்).
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32(எனினும்,) பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக்கொண்டே இருக்கும்.
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேசச் சக்தி பெற மாட்டார்கள்.
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36அன்றி, புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள் ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, "தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்" (என்றும் கூறப்படும்).
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41எனினும், இறை அச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சுவனபதியிலுள்ள மரங்களின்) நிழலிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43(அவர்களை நோக்கி,) "நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவைகளைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்" (என்று கூறப்படும்).
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44நிச்சயமாக இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46(இதனைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தாம்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48அவர்களை நோக்கி, "(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்" என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!