النبإ
An-Naba
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ
Open ayah 78:1(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டு கொள்கின்றனர்?
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
Open ayah 78:2மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவ)ô!
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
Open ayah 78:3அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:4(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
Open ayah 78:5அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்துகொள்வார்கள்.
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا
Open ayah 78:6(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்கவில்லையா?
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا
Open ayah 78:7(அதில்) மலைகளை முளைகளாக (நாட்டவில்லையா?)
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا
Open ayah 78:8ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம்.
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا
Open ayah 78:9நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம்.
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا
Open ayah 78:10நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا
Open ayah 78:11நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக் கொள்ளும் நேரமாக்கினோம்.
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا
Open ayah 78:12உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا
Open ayah 78:13அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا
Open ayah 78:14கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கின்றோம்.
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا
Open ayah 78:15அதனைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கின்றோம்.
وَجَنَّٰتٍ أَلۡفَافًا
Open ayah 78:16கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கின்றோம்).
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا
Open ayah 78:17நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا
Open ayah 78:18(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا
Open ayah 78:19வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
Open ayah 78:20மலைகள் (தம் இடம் விட்டுப்) பெயர்க்கப்பட்டு தூள் தூளாகி (பறந்து) விடும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا
Open ayah 78:21நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
لِّلطَّٰغِينَ مَـَٔابٗا
Open ayah 78:22(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا
Open ayah 78:23அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا
Open ayah 78:24அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا
Open ayah 78:25அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
جَزَآءٗ وِفَاقًا
Open ayah 78:26இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا
Open ayah 78:27ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا
Open ayah 78:28அவர்கள் நம்முடைய வசனங்களை மிக்க அலட்சியமாகப் பொய் ஆக்கினார்கள்.
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا
Open ayah 78:29எனினும், இவை அனைத்தையும் நாம் (நம்முடைய குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்துகொண்டோம்.
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
Open ayah 78:30ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்தமாட்டோம். ஆகவே, (இதனைச்) சுவைத்துப் பாருங்கள் (என்று கூறுவோம்).
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
Open ayah 78:31ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு.
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا
Open ayah 78:32(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
وَكَوَاعِبَ أَتۡرَابٗا
Open ayah 78:33(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
وَكَأۡسٗا دِهَاقٗا
Open ayah 78:34(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا
Open ayah 78:35அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا
Open ayah 78:36(இவைகளெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا
Open ayah 78:37அவனே வானங்கள், பூமி, இவைகளுக்கு மத்தியிலுள்ளஅனைத்தின் சொந்தக்காரன்; அளவற்ற அருளாளன். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்திபெற மாட்டார்கள்.
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا
Open ayah 78:38ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து "சரி! பேசும்" எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Open ayah 78:39இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا
Open ayah 78:40சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் இரு கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!