المعارج
Al-Ma'aarij
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
Open ayah 70:1(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி ஒருவன் (உங்களிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கின்றான்.
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
Open ayah 70:2நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதனைத் தடுத்துவிடக்கூடியவன் ஒருவனுமில்லை.
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
Open ayah 70:3உயர்ப்பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
Open ayah 70:4அந்நாளில் மலக்குகளும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்.
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
Open ayah 70:5(நபியே!) நீங்கள் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருங்கள்.
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
Open ayah 70:6(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதனை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.
وَنَرَىٰهُ قَرِيبٗا
Open ayah 70:7நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
Open ayah 70:8அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
Open ayah 70:9மலைகள் பஞ்சைப் போல் பறந்துவிடும்.
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
Open ayah 70:10ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்தபோதிலும்) அவனுடைய சுகத்தை விசாரிக்கமாட்டான்.
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
Open ayah 70:11குற்றவாளி, அந்நாளில் தன்னுடைய வேதனைக்குப் பரிகாரமாகத் தன்னுடைய பிள்ளைகளையும்,
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Open ayah 70:12தன்னுடைய மனைவிகளையும், தன்னுடைய சகோதரனையும்,
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
Open ayah 70:13தன்னை ஆதரித்து வந்த தன்னுடைய சொந்தக் காரர்களையும்,
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
Open ayah 70:14இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள (பிரியப்படுவான்).
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
Open ayah 70:15(எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்துகொள்ளும்.)
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
Open ayah 70:16அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
Open ayah 70:17அது புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அழைக்கும்.
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
Open ayah 70:18(பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்).
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Open ayah 70:19மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப் பட்டுள்ளான்.
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
Open ayah 70:20ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான்.
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
Open ayah 70:21அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கின்றான்.
إِلَّا ٱلۡمُصَلِّينَ
Open ayah 70:22ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர.
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
Open ayah 70:23அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
Open ayah 70:24அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு.
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 70:25அதனைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால்) கேட்காதவர் களுக்கும் (கொடுப்பார்கள்).
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 70:26கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மையென்றே நம்புகின்றனர்.
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 70:27(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்துகொண்டே இருப்பார்கள்.
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
Open ayah 70:28(ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதன்று.
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 70:29அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 70:30ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 70:31இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்.
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 70:32இன்னும் எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களும்,
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
Open ayah 70:33இன்னும் எவர்கள், தங்களுடைய சாட்சியத்திலும் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கின்றார்களோ அவர்களும்,
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 70:34எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகின்றார்களோ அவர்களும்,
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
Open ayah 70:35ஆகிய இத்தகையவர்கள்தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
Open ayah 70:36(நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்தரம்? (அவர்கள்) உங்கள்முன் ஓடி வருகின்றனர்!
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Open ayah 70:37வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம்கூட்டமாக (ஓடி வருகின்றனர்).
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
Open ayah 70:38அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று ஆசைபடுகின்றனரா?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
Open ayah 70:39அது ஆவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்.
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Open ayah 70:40கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நமது விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்!
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 70:41(இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களன்று.
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 70:42ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்.
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ
Open ayah 70:43(நபியே! அவர்களுக்கு ஒரு நாளை நீங்கள் ஞாபகமூட்டுங்கள். சிலை வணங்குபவர்கள் தங்களுடைய திருநாள்களில் பூஜைக்காக நட்டப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள்.
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 70:44(அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.