النازعات
An-Naazi'aat
Translation: Tamil - Mufti Omar Sheriff Qasimi, Darul Huda · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2(நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3நீந்துவோர் மீது சத்தியமாக!
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4(இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்,)
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6பூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில்.
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7பின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும்.
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8அந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும்.
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும்.
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10(நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (இறந்துவிட்டால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11(அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12அவ்வாறாயின், அது (நமக்கு) நஷ்டமான திரும்புதல்தான் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள். (-நாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் நமக்கு நரகம்தான். அது நமக்கு நஷ்டமாயிற்றே என்று கேலியாக பேசுகிறார்கள்.)
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13(மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் சத்தம்தான். (ஒரு முறை ஊதப்பட்டவுடன் மறுமை நிகழ்ந்து விடும்.)
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை நினைவு கூருங்கள்.
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் எல்லை மீறினான்.
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19“இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20ஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22பிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23இன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான்.
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான் (-தண்டித்தான்).
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26(அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான்.
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28அதன் முகட்டை அவன் உயர்த்தினான், இன்னும் (அதில் மேடு பள்ளம் இல்லாமல்) அதை சமப்படுத்தினான். (-ஒழுங்குபடுத்தினான்.)
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29இன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30இன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான்.
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32இன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான்.
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்).
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35மனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்).
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39(அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்.
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41(அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும்.
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42(நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!)
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது.
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45(நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுவோரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர, அது நிகழப்போகும் காலத்தை அறிவிப்பவரல்ல.)
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46அதை அவர்கள் (கண்ணால்) பார்க்கிற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில்) அவர்கள் தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத்) தோன்றும்.