المدثر
Al-Muddaththir
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ
Open ayah 74:1(வஹீயின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!)
قُمۡ فَأَنذِرۡ
Open ayah 74:2நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்;
وَرَبَّكَ فَكَبِّرۡ
Open ayah 74:3உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்;
وَثِيَابَكَ فَطَهِّرۡ
Open ayah 74:4உங்களது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்;
وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ
Open ayah 74:5அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்.
وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ
Open ayah 74:6எவருக்கும் நீங்கள் நன்றி செய்து, (அதனைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக் கொள்ளக் கருதாதீர்கள்.
وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ
Open ayah 74:7உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்.
فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ
Open ayah 74:8எக்காளம் ஊதப்படும் பட்சத்தில்,
فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ
Open ayah 74:9அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ
Open ayah 74:10(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதன்று.
ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا
Open ayah 74:11(நபியே! நீங்கள் சிபாரிசுக்கு வராது) என்னையும் (அவனையும்) விட்டுவிடுங்கள். அவனை நான் தனியாகவே படைத்தேன்.
وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا
Open ayah 74:12பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.
وَبَنِينَ شُهُودٗا
Open ayah 74:13எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا
Open ayah 74:14அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.
ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ
Open ayah 74:15பின்னும் நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கின்றான்.
كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا
Open ayah 74:16அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு எதிரியாக இருக்கின்றான்.
سَأُرۡهِقُهُۥ صَعُودًا
Open ayah 74:17அதிசீக்கிரத்தில் அவனை ஒரு கஷ்டமான சிகரத்தில் ஏற்றி விடுவேன்.
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
Open ayah 74:18நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ
Open ayah 74:19அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்!
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ
Open ayah 74:20பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்!
ثُمَّ نَظَرَ
Open ayah 74:21(ஒன்றுமில்லை.) பின்னும், (அதனைப் பற்றிக்) கவனித்தான்.
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
Open ayah 74:22பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.
ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ
Open ayah 74:23பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.
فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ
Open ayah 74:24ஆகவே "இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை" என்றும்,
إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ
Open ayah 74:25"இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை" என்றும் கூறினான்.
سَأُصۡلِيهِ سَقَرَ
Open ayah 74:26ஆகவே, நாம் அவனை நரகத்தில் எறிவோம்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ
Open ayah 74:27(நபியே!) அந்த நரகம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?
لَا تُبۡقِي وَلَا تَذَرُ
Open ayah 74:28அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ
Open ayah 74:29அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ
Open ayah 74:30(அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ
Open ayah 74:31நரகத்தின் காவலாளிகளாக மலக்குகளையேயன்றி (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு) இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதனை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். (நபியே!) உங்கள் இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களேயன்றி வேறில்லை.
كَلَّا وَٱلۡقَمَرِ
Open ayah 74:32அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!
وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ
Open ayah 74:33செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!
وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ
Open ayah 74:34வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக!
إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ
Open ayah 74:35நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.
نَذِيرٗا لِّلۡبَشَرِ
Open ayah 74:36அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ
Open ayah 74:37உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக்கொள்ளவோ விரும்புகின்றானோ அவன் அவ்வாறு செய்யவும்.
كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ
Open ayah 74:38ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கின்றான்.
إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ
Open ayah 74:39ஆயினும், (எவர்களுடைய பட்டோலை வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பார்கள்.
فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ
Open ayah 74:40அவர்கள் சுவனபதியில் இருந்துகொண்டு,
عَنِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 74:41குற்றவாளிகளை நோக்கி,
مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ
Open ayah 74:42"உங்களை நரகத்தில் புகுத்தியது எது?" என்று கேட்பார்கள்.
قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ
Open ayah 74:43அதற்கவர்கள் "நாங்கள் தொழவில்லை.
وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ
Open ayah 74:44நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ
Open ayah 74:45வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.
وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 74:46கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ
Open ayah 74:47(நாங்கள் மரணித்து) இதனை உறுதியாகக் காணும் வரையில் (இவ்வாறே இருந்தோம்)" என்றும் கூறுவார்கள்.
فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ
Open ayah 74:48ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காது.
فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ
Open ayah 74:49அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர்.
كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ
Open ayah 74:50வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர்!
فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ
Open ayah 74:51அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்).
بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ
Open ayah 74:52(இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றான்.
كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 74:53அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை.
كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ
Open ayah 74:54அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 74:55(நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ
Open ayah 74:56அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.