عبس
Abasa
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30அடர்ந்த தோட்டங்களையும்,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31பழங்களையும், தீவனங்களையும்-
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.