عبس
Abasa
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3(நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க, அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்கள்?)
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கின்றானோ,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6அவனை வரவேற்பதில் நீங்கள் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள்.
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உங்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை(யே)!
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8எவர் (தானாகவே) உங்களிடம் ஓடி வருகின்றாரோ,
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர்.
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10எனினும், நீங்கள் அவரை அலட்சியம் செய்துவிடுகின்றீர்கள்.
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11அவ்வாறு செய்யாதீர்கள். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசமாகும்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகின்றாரோ அவர் இதனை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது.)
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; மிகப் பரிசுத்தமானது.
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18எதைக்கொண்டு அவனை படைத்திருக்கின்றான் (என்பதை அவன் கவனித்தானா)?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனை படைக்கின்றான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகின்றான்.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே உயிர்ப்பிப்பான்.
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23எனினும், நிச்சயமாக மனிதன் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24மனிதன் தன்னுடைய உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகின்றது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்து,
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26பின்னர் பூமியையும் பிளந்து (வெடிக்கச் செய்து)
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கின்றோம்.
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு வெளிப்படுத்துகின்றோம்.
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33(உலக முடிவின்பொழுது) செவிடுபடும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும்,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் வெருண்டோடுவான்.
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும்,
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும்.
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.