الإنشقاق
Al-Inshiqaaq
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
Open ayah 84:1(உலக முடிவின்போது) வானம் பிளந்துவிடும்,
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:2அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும். (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
Open ayah 84:3மேலும் பூமி விரிக்கப்பட்டுவிடும்.
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
Open ayah 84:4அது தன்னிடம் உள்ளவைகளையெல்லாம் எறிந்து வெறுமனேயாகிவிடும்.
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
Open ayah 84:5அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும். (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
Open ayah 84:6மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரையில் (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டுக்) கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய். (பின்னர் மறுமையில்) அவனை நீ சந்திக்கின்றாய்.
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
Open ayah 84:7ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ,
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
Open ayah 84:8அவன் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
Open ayah 84:9அவர் சந்தோஷப்பட்டவனாக(ச் சுவனபதியிலுள்ள) தன்னுடைய குடும்பத்தார்களிடம் திரும்புவான்.
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
Open ayah 84:10எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
Open ayah 84:11அவன், (தனக்குக்) கேடுதான் என்று சப்தமிட்டுக்கொண்டே,
وَيَصۡلَىٰ سَعِيرًا
Open ayah 84:12நரகத்தில் நுழைவான்.
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
Open ayah 84:13ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க ஆனந்தமாக இருந்தான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Open ayah 84:14மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
Open ayah 84:15அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்கினவனாகவே இருந்தான்.
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
Open ayah 84:16(மாலை) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
Open ayah 84:17இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவைகளின் மீதும் (சத்தியமாக!)
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Open ayah 84:18பூரணச் சந்திரன் மீதும் (சத்தியமாக!)
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
Open ayah 84:19(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கின்றது.
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 84:20ஆகவே, (இதனை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதனை நம்புவதில்லை.
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
Open ayah 84:21அவர்களுக்கு இந்தக் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
Open ayah 84:22அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்தக் குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
Open ayah 84:23எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
Open ayah 84:24ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
Open ayah 84:25எனினும், இவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.