الفجر
Al-Fajr
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
Open ayah 89:1விடியற்காலையின் மீதும்,
وَلَيَالٍ عَشۡرٖ
Open ayah 89:2பத்து இரவுகளின் மீதும்,
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
Open ayah 89:3ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும்,
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
Open ayah 89:4நிகழ்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
Open ayah 89:5இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கின்றது.
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Open ayah 89:6(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
Open ayah 89:7(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:8அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
Open ayah 89:9இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
Open ayah 89:10இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?)
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
Open ayah 89:11இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
Open ayah 89:12(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
Open ayah 89:13ஆதலால், உங்களது இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக் கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
Open ayah 89:14நிச்சயமாக உங்களது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கின்றான்.
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
Open ayah 89:15ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான்.
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
Open ayah 89:16ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான்.
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
Open ayah 89:17(விஷயம்) அவ்வாறன்று. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 89:18ஏழைகளுக்கு உணவு (நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
Open ayah 89:19(பிறருடைய) அனந்தரப் பொருளை(யும் சேர்த்துப்) புசித்து விடுகின்றீர்கள்.
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
Open ayah 89:20மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்.
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
Open ayah 89:21ஆகவே, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
Open ayah 89:22உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள்.
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
Open ayah 89:23அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அச்சமயம் (உதயமாகும்) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
Open ayah 89:24"என்னுடைய வாழ்க்கையில் நான் (யாதொரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டாமா" என்று புலம்புவான்.
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:25அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ
Open ayah 89:26(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
Open ayah 89:27(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே!
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ
Open ayah 89:28நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்)
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
Open ayah 89:29"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து,
وَٱدۡخُلِي جَنَّتِي
Open ayah 89:30என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).