البلد
Al-Balad
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:1(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கின்றேன்.
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:2அதிலும் நீங்கள் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்,
وَوَالِدٖ وَمَا وَلَدَ
Open ayah 90:3(மனிதர்களின்) பெற்றோர் (ஆகிய ஆதம்) மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகளின் மீதும் சத்தியமாக!
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
Open ayah 90:4மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கினவனாகவே படைத்திருக்கின்றோம்.
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
Open ayah 90:5(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
Open ayah 90:6"ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்" என்று, அவன் (கர்வம்கொண்டு பெருமையாகக்) கூறுகின்றான்.
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
Open ayah 90:7அவ்வளவு பொருளை ஒருவருமே காணவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
Open ayah 90:8(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா?
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
Open ayah 90:9(அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ள வில்லை.) (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதனைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
Open ayah 90:10அன்றி, (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
Open ayah 90:11எனினும், (இதுவரையில்) அவன் "அகபா"வை (கணவாயை)க் கடக்கவில்லை.
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
Open ayah 90:12(நபியே!) "அகபா" என்னவென்று நீங்கள் அறிவீரா?
فَكُّ رَقَبَةٍ
Open ayah 90:13அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
Open ayah 90:14அல்லது, கடும் பசியான நாளில் உணவளிப்பது...
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
Open ayah 90:15உறவு முறையிலுள்ள அனாதைக்கு,
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
Open ayah 90:16அல்லது (வறுமையில்) மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கு (உணவளிப்பது அகபாவாகும்.)
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
Open ayah 90:17(இதனை அன்றி) எவர்கள் நம்பிக்கை கொண்டு ஒருவருக்கொருவர் பொறுமையைக் கொண்டு நல்லுபதேசம் செய்து கொண்டும், கருணை காட்ட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருக்கின்றார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 90:18இத்தகையவர்கள்தாம் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 90:19எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
Open ayah 90:20அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.