الشمس
Ash-Shams
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
Open ayah 91:1சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும்,
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
Open ayah 91:2(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Open ayah 91:3(சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
Open ayah 91:4(அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Open ayah 91:5வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
Open ayah 91:6பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
Open ayah 91:7ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
Open ayah 91:8அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
Open ayah 91:9எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
Open ayah 91:10எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்.
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
Open ayah 91:11ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
Open ayah 91:12அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
Open ayah 91:13அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி "இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا
Open ayah 91:14எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
Open ayah 91:15இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.