الليل
Al-Lail
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
Open ayah 92:1(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
Open ayah 92:2பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Open ayah 92:3ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
Open ayah 92:4(மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
Open ayah 92:5ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
Open ayah 92:6(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கின்றாரோ,
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
Open ayah 92:7அவர் சுகமடைவதற்குள்ள (சுவனபதியின்) வழியை நாம் அவருக்கு எளிதாக்கித் தருவோம்.
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
Open ayah 92:8எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
Open ayah 92:9(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கின்றானோ,
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
Open ayah 92:10அவனுக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
Open ayah 92:11அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (யாதொரு) பயனுமளிக்காது.
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
Open ayah 92:12நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பதுதான் நமது கடமையாகும்.
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
Open ayah 92:13நிச்சயமாக இம்மையும், மறுமையும் நம்முடையனவே!
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
Open ayah 92:14(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்.
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى
Open ayah 92:15மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 92:16அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
Open ayah 92:17இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ
Open ayah 92:18(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ
Open ayah 92:19அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும்,
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 92:20மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).
وَلَسَوۡفَ يَرۡضَىٰ
Open ayah 92:21(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.