الغاشية
Al-Ghaashiya
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Open ayah 88:1சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Open ayah 88:2அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةٞ نَّاصِبَةٞ
Open ayah 88:3அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Open ayah 88:4கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Open ayah 88:5கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Open ayah 88:6அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Open ayah 88:7அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Open ayah 88:8அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Open ayah 88:9தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
فِي جَنَّةٍ عَالِيَةٖ
Open ayah 88:10உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Open ayah 88:11அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Open ayah 88:12அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Open ayah 88:13அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Open ayah 88:14(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Open ayah 88:15மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Open ayah 88:16விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Open ayah 88:17(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Open ayah 88:18மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Open ayah 88:19இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Open ayah 88:20இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Open ayah 88:21ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Open ayah 88:22அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Open ayah 88:23ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Open ayah 88:24அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Open ayah 88:25நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Open ayah 88:26பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.