الإنفطار
Al-Infitaar
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
Open ayah 82:1(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
Open ayah 82:2நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
Open ayah 82:3கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
Open ayah 82:4சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
Open ayah 82:5ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவைகளையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவைகளையும் நன்கறிந்துகொள்ளும்.
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
Open ayah 82:6மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
Open ayah 82:7அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னை படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
Open ayah 82:8அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன்னுடைய அவயங்களைப் பொறுத்தினான்.
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Open ayah 82:9எனினும், (மனிதர்களே!) கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகின்றீர்கள்.
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
Open ayah 82:10நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
كِرَامٗا كَٰتِبِينَ
Open ayah 82:11அவர்கள் (மலக்குகளில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
Open ayah 82:12நீங்கள் செய்பவைகளையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
Open ayah 82:13ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சுவனபதியில் இருப்பார்கள்.
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
Open ayah 82:14நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 82:15கூலி கொடுக்கும் நாளில் அதனையே அவர்கள் அடைவார்கள்.
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
Open ayah 82:16அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:17(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 82:18கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உங்களுக்கு எவரேனும் அறிவித்தனரா?
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
Open ayah 82:19அந்நாளில் யாதொரு ஆத்மாவும், மற்ற ஆத்மாவுக்கு யாதொரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.