البلد
Al-Balad
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:1இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
Open ayah 90:2நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٖ وَمَا وَلَدَ
Open ayah 90:3பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
Open ayah 90:4திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
Open ayah 90:5“ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
Open ayah 90:6“ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
Open ayah 90:7தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
Open ayah 90:8அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
Open ayah 90:9மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
Open ayah 90:10அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
Open ayah 90:11ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
Open ayah 90:12(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
فَكُّ رَقَبَةٍ
Open ayah 90:13(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ
Open ayah 90:14அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ
Open ayah 90:15உறவினனான ஓர் அநாதைக்கோ,
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ
Open ayah 90:16அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ
Open ayah 90:17பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 90:18அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 90:19ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ
Open ayah 90:20அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.