الزلزلة
Az-Zalzala
Translation: Tamil - Mufti Omar Sheriff Qasimi, Darul Huda · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
Open ayah 99:1பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
Open ayah 99:2இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
Open ayah 99:3இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
Open ayah 99:4அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
Open ayah 99:5அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 99:6அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
Open ayah 99:7ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
Open ayah 99:8இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.