الشمس
Ash-Shams
Translation: Tamil - Mufti Omar Sheriff Qasimi, Darul Huda · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
Open ayah 91:1சூரியன் மீது சத்தியமாக! அதன் பகல் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
Open ayah 91:2சந்திரன் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது பின்தொடரும்போது!
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Open ayah 91:3பகலின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது)!
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
Open ayah 91:4இரவின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது மூடும்போது!
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Open ayah 91:5வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
Open ayah 91:6பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
Open ayah 91:7ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
Open ayah 91:8ஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
Open ayah 91:9(நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் பாதுகாத்து, நல்லமல்களை கொண்டு) யாரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தினானோ அவர் திட்டமாக வெற்றிபெற்றார்.
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
Open ayah 91:10யாருக்கு அதை (-அவரது ஆன்மாவை பாவத்தில்) அல்லாஹ் மறைத்துவிட்டானோ (-வழிகேட்டில், பாவத்தில் விட்டுவிட்டானோ) அவர் திட்டமாக நஷ்டமடைந்தார்.
كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ
Open ayah 91:11ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.
إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا
Open ayah 91:12அதன் தீயவன் புறப்பட்டபோது,
فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا
Open ayah 91:13ஆக, அல்லாஹ்வின் தூதர் (-ஸாலிஹ்) அவர்களுக்குக் கூறினார்: “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் தடை செய்யாதீர்!’’
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا
Open ayah 91:14ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள். இன்னும் அ(ந்த ஒட்டகத்)தை (அறுத்து) கொன்றுவிட்டார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான். அ(ந்த சமுதாயத்)தை (அதில் உள்ள அனைவரையும் தண்டனையில்) சமமாக்கினான். (ஒட்டகத்தை கொன்றவன் ஒருவனாக இருந்தாலும் அதை எல்லோரும் பொருந்திக் கொண்டதால் அந்த சமுதாயத்தில் இருந்த எல்லோருக்கும் அதே தண்டனையை கொடுத்து அழித்துவிட்டான்.)
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
Open ayah 91:15இன்னும், அவன் அதன் முடிவைப் பயப்பட மாட்டான்.