التكاثر
At-Takaathur
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
Open ayah 102:1நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது).
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
Open ayah 102:2நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது).
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:3நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) பின்னர் நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:4நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவைகளின் பலன்களையும் பின்னர்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
Open ayah 102:5நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற நீங்கள் அறிவீர்களாயின்,
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
Open ayah 102:6நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண் முன்) காண்பீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
Open ayah 102:7சந்தேகமற, மெய்யாகவே அதனை நீங்கள் உங்கள் கண்ணால் கண்டுகொள்வீர்கள்.
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
Open ayah 102:8(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.