القارعة
Al-Qaari'a
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡقَارِعَةُ
Open ayah 101:1(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
مَا ٱلۡقَارِعَةُ
Open ayah 101:2(அத்தகைய) திடுக்கத்தைத் தரும் சம்பவம் என்ன?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ
Open ayah 101:3(நபியே!) அச்சம்பவம் இன்னதென்று நீங்கள் அறிவீர்களா?
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ
Open ayah 101:4அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகி விடுவார்கள்.
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ
Open ayah 101:5மலைகள் கொட்டிய பஞ்சுகளைப்போல் பறக்கும்.
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ
Open ayah 101:6எவனுடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Open ayah 101:7அவன் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பான்.
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ
Open ayah 101:8எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
فَأُمُّهُۥ هَاوِيَةٞ
Open ayah 101:9அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ
Open ayah 101:10அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீங்கள் அறிவீர்களா?
نَارٌ حَامِيَةُۢ
Open ayah 101:11(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.