العاديات
Al-Aadiyaat
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
Open ayah 100:1மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
Open ayah 100:2(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
Open ayah 100:3அன்றி, அவைகள் அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
Open ayah 100:4(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப் போல்) புழுதியைக் கிளப்பும்.
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
Open ayah 100:5பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
Open ayah 100:6(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
Open ayah 100:7நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
Open ayah 100:8நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
Open ayah 100:9அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா?
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ
Open ayah 100:10அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா?
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ
Open ayah 100:11நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.