الضحى
Ad-Dhuhaa
Translation: Tamil - Mufti Omar Sheriff Qasimi, Darul Huda · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ
Open ayah 93:1(முற்)பகல் மீது சத்தியமாக!
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
Open ayah 93:2இரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Open ayah 93:3(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை.
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
Open ayah 93:4இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கைதான் உமக்கு மிகச் சிறந்தது.
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
Open ayah 93:5திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆக, நீர் திருப்தியடைவீர்.
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
Open ayah 93:6உம்மை அனாதையாக அவன் காணவில்லையா? ஆக, (உம்மை) அவன் ஆதரித்தான் (-உமக்கு அடைக்கலம் கொடுத்தான்).
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
Open ayah 93:7இன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
Open ayah 93:8இன்னும், அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) செல்வந்தராக்கினான்.
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
Open ayah 93:9ஆக, அனாதைக்கு அநீதி செய்யாதீர்!
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
Open ayah 93:10ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
Open ayah 93:11ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!