التكاثر
At-Takaathur
Translation: Tamil - Mufti Omar Sheriff Qasimi, Darul Huda · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
Open ayah 102:1(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது.
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
Open ayah 102:2இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:3அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Open ayah 102:4பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
Open ayah 102:5அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
Open ayah 102:6நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
Open ayah 102:7பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
Open ayah 102:8பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.