العلق
Al-Alaq
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
Open ayah 96:1(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
Open ayah 96:2“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
Open ayah 96:3ஓதுவீராக| உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
Open ayah 96:4அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
Open ayah 96:5மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
Open ayah 96:6எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
Open ayah 96:7அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
Open ayah 96:8நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
Open ayah 96:9தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
Open ayah 96:10ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
Open ayah 96:11நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
Open ayah 96:12அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
Open ayah 96:13அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Open ayah 96:14நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
Open ayah 96:15அப்படியல்ல| அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
Open ayah 96:16தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
Open ayah 96:17ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
Open ayah 96:18நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
Open ayah 96:19(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.