الماعون
Al-Maa'un
Translation: Tamil - Mufti Omar Sheriff Qasimi, Darul Huda · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
Open ayah 107:1(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
Open ayah 107:2ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
Open ayah 107:3இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்.
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
Open ayah 107:4ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான்,
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
Open ayah 107:5அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
Open ayah 107:6அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
Open ayah 107:7இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.